எஸ்.பி.பி மறைவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா இரங்கல்!

hjk

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம்எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். அரசியல் கட்சி முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எஸ்.பி.பி.-யின் மறைவுக்கு இரங்கள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, "தனித்தன்மையான குரலின் மூலம் உலகெங்கிலும் உள்ள இசைக்கலைஞர்களுக்கு இல்லமாக திகழ்ந்தவர் எஸ்.பி.பி. அவரின் பாடல்கள் என்றும் அழியாதது!" என்று தெரிவித்துள்ளார்.

hospital
இதையும் படியுங்கள்
Subscribe