Advertisment

அமைச்சரவையில் சுயேச்சைக்களுக்கு வாய்ப்பளித்த முதல்வர் குமாரசாமி....அதிர்ச்சியில் காங்கிரஸ்!

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராக உள்ளார். இவர் முதல்வராக பதவியேற்ற நாள் முதல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி எம்எல்ஏக்களாக உள்ள சிலர் ஆட்சிக்கு எதிராக பேசி வருகின்றனர். அதே போல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலவர் சித்தராமையாவிற்கு முதல்வர் பதவி தர வேண்டும் என முதல்வர் குமாரசாமி அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் பேசி வருகின்றன. இது போன்ற அரசியல் நிகழ்வுகள் கர்நாடக மாநிலத்தில் அவ்வப்போது தொடர்வது வழக்கம்.

Advertisment

karnataka cm kumarasamy

அந்த சமயத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சமாதானப்படுத்தி வருவதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் கர்நாடக மாநில முதலவர் குமாரசாமி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த ஆலோசனை முடிவில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

Advertisment

karnataka cm kumarasamy

அதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநில அமைச்சரவை விரிவாக்கம் இன்று ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. முதற்கட்டமாக இரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஸ், ஆர்.சங்கர் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கர்நாடக மாநில கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கிடையில், கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொள்ள சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்குவதற்கு காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் சபாநாயகரான கோலிவாட், சுயேச்சை எம்.எல்.ஏ.வான ஆர்.சங்கருக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது என்று நேற்று பகிரங்கமாக கருத்து தெரிவித்தார். இதன் காரணமாக கர்நாடகா அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cabinet expand oath ceremony cm kumarasamy congress India karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe