/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3986.jpg)
கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத்தேர்தல் வரவுள்ள நிலையில் அங்குதேர்தல் களம்சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் பாஜகவும், எப்படியாவது இழந்தஆட்சியைப்பிடித்து விடவேண்டும் என்ற முயற்சியில் காங்கிரஸும் படுத்தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இதனால் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும்கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் நாளுக்கு நாள் தலைவர்கள் பேசுவது சர்ச்சையாகியும் வருகிறது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்மல்லிகார்ஜூனகார்கேபிரதமர் மோடியை விஷப்பாம்பு என்று விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்வினையாற்றவே, “நான் பிரதமர் மோடியை விமர்சிக்கவில்லை.பாஜகவைத்தான்விமர்சித்தேன். அப்படி என் கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புகேட்கிறேன்” என்றார்மல்லிகார்ஜூனகார்கே.
இந்தசர்ச்சையேஇன்னும் ஓயாத நிலையில், கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவரும்எம்.எல்.ஏவுமானபசனகௌடாபாட்டீல்யாத்னால்காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத்தலைவர் சோனியா காந்தியைவிஷப்பெண்என்று பேசியுள்ளது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
பொப்பள்மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பசனகௌடாபாட்டீல்யாத்னால், “உலகமே பிரதமர்மோடியைப்பாராட்டுகிறது. ஒருகாலத்தில் பிரதமர் மோடிக்குஅமெரிக்கா விசா வழங்க மறுத்தது. ஆனால், இன்று உலகத்தலைவராக உயர்ந்து நிற்கும்அவருக்குசிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆனால், அவரை விஷப்பாம்புடன் ஒப்பிடுகிறார்கள். இதெல்லாம் சோனியா காந்தியின் அறிவுறுத்தல் பெயரால் நடைபெறுகிறது.நாட்டைச் சீரழித்தவர் சோனியா காந்தி. அவர் விஷப்பெண்ணா? சீனா மற்றும்பாகிஸ்தானுக்குசோனியா காந்திஏஜெண்டாகசெயல்படுகிறார்” என்றார்.இதற்குக்காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக தங்களது கண்டனத்தைமுன்வைத்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)