ramesh jarkiholi

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்ரமேஷ் ஜர்கிஹோலி. கர்நாடக அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவராகஇவர் கருதப்படுகிறார். இந்தநிலையில், அவர் ஒரு அடையாளம் தெரியாத பெண்ணோடுதனிமையில்இருப்பதுபோன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சிலகன்னடதொலைக்காட்சிகள் இந்த வீடியோவைஒளிபரப்பியநிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்தினேஷ் கல்லஹள்ளி, அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, வேலை தருவதாக கூறி, அந்தப் பெண்ணைஏமாற்றிவிட்டதாக காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். மேலும் அந்தப் புகாரில், ஆபாசபடம் அடங்கியசி.டிஅப்பெண்ணிடம் இருப்பதைத் தெரிந்துகொண்ட அமைச்சர், அந்தப் பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஆபாசவீடியோ சர்ச்சையில் சிக்கியஅமைச்சர்ரமேஷ் ஜர்கிஹோலியை, பதவி நீக்கம்செய்யக்கோரி பல்வேறுதரப்பினரும் குரலெழுப்பிய நிலையில்,ரமேஷ் ஜர்கிஹோலி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர், "எனக்கு எதிரான குற்றச்சாட்டு, உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதால், நான் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Advertisment