Advertisment

ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோருகிறார்- எடியூரப்பா!

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தால், 17 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான நான்கு நாள் விவாதத்திற்கு பிறகு இன்று மாலை 07.30 மணியளவில் நடைபெற்றது. அதில் ஆளும் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், அரசுக்கு எதிராக 105 வாக்குகளும் பதிவானதால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

Advertisment

KARNATAKA BJP LEADER YEDDYURAPPA MEET WITH GOVERNOR VAJUBHAI VALA

இதனையடுத்து குமாரசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை நேரில் சந்தித்து அளிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா தேர்வு செய்யப்படவுளளார். அதன் தொடர்ச்சியாக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்திக்கும் எடியூரப்பா, பாஜக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, ஆட்சி அமைக்க உரிமைக்கோருகிறார். கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

HAND RAISED Yeddyurappa dissolve karnataka floor test Karnataka Government
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe