Skip to main content

'குடியுரிமை மசோதா' பெங்களூரில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019


கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அசாம் உள்ளிட்ட பகுதிகளில் இதை அடிப்படையாக வைத்து வன்முறைகள் வெடித்துள்ளது. தில்லி பல்கலைகழகங்களிலும் மாணவர்கள் போராட்டம் உச்சத்தில் இருந்து வருகிறது.



இந்நிலையில், குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடதுசாரி மற்றும் முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து நாளை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.  இதையடுத்து, பெங்களூரு நகரம் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கபடுவதாக பெங்களூர் காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.இதனால் பெங்களூர் மாநகரம் பரபரப்பாக உள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்