கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் கர்நாடகா மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை, பாஜக கடத்தி விட்டதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சிவகுமார் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டார்.

Advertisment

KARNATAKA ASSEMBLY FLOOR TEST GOVERNOR VAJUBHAI VALA ANNOUNCED CM HD KUMARASAMY SHOCKING

அதனைத் தொடர்ந்து ஸ்ரீமந்த் பாட்டீல் எம்.எல்.ஏ மும்பையில் உள்ள ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் கர்நாடகா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது அனைத்து கட்சி தலைவர்களும் பேசி வருவதால், நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

KARNATAKA ASSEMBLY FLOOR TEST GOVERNOR VAJUBHAI VALA ANNOUNCED CM HD KUMARASAMY SHOCKING

மேலும் ஆட்சியை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளன. அதே சமயம் பாஜக எம்.எல்.ஏக்களை ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் திட்டமிட்டு கால தாமதம் செய்வதாக ஆளுநரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள் என ஆளுநர் வஜூபாய் வாலா, சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு வேண்டுகோள் விடுத்தார். அவை நிகழ்வுகளை கண்காணிக்க ஆளுநரின் செயலர் கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகை. கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், முதல்வர் குமாரசாமி அரசு கவிழும் என்பது குறிப்பிடத்தக்கது.