கர்நாடகா மாநிலம், பெங்களுருவில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து போதைப்பொருள் இருக்கிறதா என மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நடிகை ராகிணி திவேதி கைதான நிலையில் கர்நாடகாவில் போதைப்பொருள் விவகாரம் சூடுபிடித்துள்ளது.
தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள சஞ்சனா கல்ராணி தமிழில் ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.