KARNANATAK BENGALURU ACTRESS RAGINI CENTRAL CRIME BRANCH

Advertisment

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ்ப்பட நடிகை ராகினி திவேதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப்பொருள் விவகாரத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த தமிழ்ப்பட நடிகை ராகினி திவேதியின் பெங்களூரு வீட்டில் இன்று (04/09/2020) காலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

Advertisment

KARNANATAK BENGALURU ACTRESS RAGINI CENTRAL CRIME BRANCH

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகையின் நண்பரான ஆர்டிஓ அலுவலக இன்ஸ்பெக்டர் ரவியை ஏற்கனவே கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகை ராகினி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், வீட்டில் சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக நடிகை ராகினியை அழைத்துச் சென்றனர்.ஏற்கனவே இவருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், அறியான் ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்தவர்கள் நடிகை ராகினி திரிவேதி.