Lunar eclipse

நேற்று நிகழ்ந்த சந்திர கிரகணம்இந்த ஆண்டின்நீண்ட நேரம் நிகழ்ந்த சந்திர கிரகணமாக பார்க்கப்பட்டது. அதேபோல் ஜோதிட ரீதியாக இந்த சந்திர கிரகண நிகழ்வால்8 ராசி காரர்களுக்கு பாதிப்பு வரும் என கூறப்பட்டு வந்தது.

Advertisment

இந்நிலையில்கர்நாடகாவில் ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ள சில மந்திரிகள்இது தொடர்பாக தங்களது ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கிரகணத்தின் போது சொந்த ஊரில் இருக்கவேண்டும் என்ற ஜோதிடர்களின் அறிவுரையால் நேற்றுக்கு முந்தின நாளே பெங்களூருவிலிருந்து பல 20-கும் மேற்பட்ட மந்திரிகள் சொந்த ஊருக்கு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் பெங்களூருவில் உள்ள மந்திரி அறைகள் வெறிச்சோடியது.

Advertisment

உயர்கல்வி துறை அமைச்சர் ஜிடி.தேவகவுடாஉட்பட 21 மந்திரிகள் மட்டுமே நேற்று அலுவல் வேலைகளை மேற்கொண்டதாகவும், இதனால் கர்நாடக தலைமை செயலகமே வெறிச்சோடி போனது. மேலும் அமைச்சர்களை சந்திக்க வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

ஆனால் இதுபற்றி கூறிய காங்கிரஸ் அமைச்சர் ஒருவர்கூறுகையில், அமைச்சர் பரமேஸ்வரராவின் சகோதரர் சிவாபிரசாத் இறந்துவிட்டதால்அனைவரும் அவருக்குதுக்கம் விசாரிக்க சென்றனர் என கூறினார்.

Advertisment