
அசாம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி புறப்பட்ட ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் கீழே இறங்கினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலத்தின் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ரயில் பெட்டி ஒன்றில் இருந்து திடீரென அதிகப்படியான புகை வெளியேறியது. இதனால் திடீரென ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். ஒடிசாவின் பிரம்மப்பூர் ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் தண்டவாளத்தில் இருந்த கோணிப்பை ஒன்று சக்கரத்தில் சிக்கியதில் ஏற்பட்ட தேய்மானத்தில் புகை ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திடீரென ஏற்பட்ட தீ மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் பதற்றத்துடன் கீழே இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us