தமிழகத்தை அடுத்து கன்னடத்திலும் ட்ரெண்டாகும் "இந்தி கொத்தில்லா‌ ஹோகோ"

karnataka

தமிழகத்தில் 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் ட்ரெண்ட் ஆன நிலையில் தற்போது இதே வாசகம் கன்னடத்திலும் ட்ரெண்டாகி வருகிறது.

அண்மையில் தமிழகத்தில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மற்றும் சில திரைப் பிரபலங்கள் ''இந்தி தெரியாது போடா' 'ஐ அம்தமிழ் பேசும் இந்தியன்' போன்ற டி-ஷர்ட்கள்அணிந்துவெளியாகிய புகைப்படங்கள் வைரலாகி, சமூகவலைதளங்களில் 'இந்தி தெரியாது போடா'' என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகியது. இந்நிலையில் இதே போன்று கன்னடத்தில் "இந்தி கொத்தில்லா‌ ஹோகோ" என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.

அதேபோல் கன்னடத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், தனஞ்ஜெய்ஆகியோர் இந்தி திணிப்புக்கு எதிரான கன்னட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னடர்கள், பெங்களூரு ரயில்நிலையத்தில் உள்ள ரயில் நிலைய பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை பெயர்த்தெடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Hindi imposition karnataka Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe