Advertisment

மக்களவையில் பரபரப்பை ஏற்படுத்திய கனிமொழியின் பதவியேற்பு...

மக்களவை தேர்தல் முடிந்து பாஜக பதவியேற்றபின் முதல் கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். இரண்டாம் நாளான இன்று தமிழகத்தை சேர்ந்த எம்.பி க்கள் பதவியேற்றுள்ளார்.

Advertisment

kanimozhi speech in first day of loksabha

இதில் நேற்று பதவியேற்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு விருப்பமான பிராந்திய மொழிகளையே பிரமாணம் மேற்கொண்டனர். அந்த வகையில் இன்று தமிழக எம்.பி க்கள் தமிழ் மொழியில் பதவியேற்றனர். அப்போது அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பதவியேற்பின் இறுதியில் தங்களது கொள்கைகளையே, அல்லது வேறு சில பிடித்த விஷயங்களையோ கூறி உரையே முடித்தனர்.

Advertisment

அப்போது தமிழக எம்.பி க்கள் பலர் "வாழ்க தமிழ்" என்ற முழக்கத்தோடு தங்கள் உரையை முடித்தனர். அப்போது திமுகவின் கனிமொழி "வாழ்க தமிழ், வாழ்க பெரியார்" என கூறி பதவியேற்றார். அப்போது மக்களவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் "ஜெய் ஸ்ரீராம்" என தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

periyar kanimozhi loksabha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe