Advertisment

'கொச்சைப்படுத்திய கங்கனா'-அவருக்கு அதிகாரம் இல்லை என கைவிரித்த பாஜக

'Kangana who insulted'-BJP has spread its arms that she has no power

கடந்த பாஜக ஆட்சியில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத் தெரிவித்த கருத்துக்கு பாஜக உடன்படாது என பாஜக தலைமை விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

கடந்த பாஜக ஆட்சியில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். அந்த வகையில் பாஜக எம்.பி கங்கனா ரனாவத் அளித்த பேட்டியில், 'விவசாயிகள் போராட்டத்தின் பொழுது பல்வேறு குற்றச் செயல்கள் அரங்கேறின. பாலியல் தொல்லைகளும் கொலைகளும் அரங்கேறின. மத்திய அரசு வேளாண் சட்டங்களை ஒருவேளை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டக்காரர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக்கூடும். தேசத்தின் தலைமை வலுவாக இல்லாமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து இந்த தேசம் அறியாது. அங்கு படுகொலை செய்யப்பட்டு பலர் தூக்கில் ஏற்றப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தது'' என தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் பாஜக எம்.பி கங்கனா ரனாவத்தின் கருத்தில் உடன்பாடு இல்லை என பாஜக தலைமை அறிவித்துள்ளது. பாஜகவின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் கருத்துக்களை வெளியிட கங்கனாவுக்கு அதிகாரம் தரப்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதற்காக பெண் காவலரிடம் கங்கனா ரனாவத் அறை வாங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

kanganaranaut
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe