Kandapally train accident- Prime Minister Modi condoles

ஆந்திராவில் சிக்னல் கோளாறு காரணமாக இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ராயகடா செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற பொழுது சிக்னல் கோளாறு காரணமாக நின்றது. அப்போது பின்னால் வந்த பலாசா விரைவு ரயில் பாசஞ்சர் ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் குறித்த தகவலை தெரிந்துகொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தற்பொழுது ரயில் விபத்து நடந்துள்ள இடத்திற்கு விசாகப்பட்டினத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு 40 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இந்த விபத்தில் முதல் கட்டமாக ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மோடி, மீட்புப் பணிகள் தொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்' 'ஆந்திராவில் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புக் குழுக்கள் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் கேட்கப்பட்டுள்ளது.தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.

Advertisment

உதவி எண்கள்: புவனேஷ்வர் 0674-2301525, 2303069, வால்டெய்ர் -0891-2885914, 89127 46330, 89127 44619, 81060 53051, 81060 53052, 85000 41670, 85000 41671, ஸ்ரீகாகுளம் 0891-2885911, 2885912, 2885913, 2885914.