Advertisment

சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா மருத்துவமனையில் அனுமதி

fhcgc

Advertisment

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களுக்கும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதனால் சபரிமலையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி சபரிமலை கோவிலுக்குள் இரு பெண்கள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அந்த இரண்டு பேரில் ஒருவரான கனகதுர்கா நேற்று தனது வீட்டில் இருந்த போது அவரது உறவினர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் இதற்கு முன்னதாகவே கனகதுர்காவின் கணவர், கனகதுர்காவை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala sabarimala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe