ADVERTISEMENT

காஷ்மீர் விவகாரத்தில் அப்ரிடிக்கு,  காம்பீர் பதிலடி! 

06:25 PM Aug 06, 2019 | Anonymous (not verified)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை 11.00 மணிக்கு மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த நிலையில் பாக்கிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீர் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் ஐ.நா சபை உறுதியளித்தபடி வழங்க வேண்டும். சுதந்திர உரிமை என்பது அனைவருக்கும் சொந்தமானது தான். ஐ.நா சபை உருவாக்கப்பட்டது ஏன்? அது ஏன் தற்போது தூங்குகிறது? காஷ்மீர் மாநிலத்தில் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் அஃப்ரிடியின் இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்பீர், “இவை அனைத்தும் குற்றச்செயல்களுக்கு எதிரான மனிதநேய நடவடிக்கை. இதற்கு குரல் கொடுக்கும் அப்ஃரிடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் குற்றசெயல்கள் குறித்து பேச மறந்துள்ளார். கவலை வேண்டாம் மகனே... இவை அனைத்தும் தீர்க்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT