kam

Advertisment

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இன்று மதியம் முதல்வராக பதவியேற்றார் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத். தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தின் பொழுது ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி அளித்திருந்தது. இந்நிலையில் இன்று கமல்நாத் முதல்வராக பதவியேற்ற 4 மணிநேரத்தில் முதல் கையெழுத்தாக இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார். மதியம் நடைபெற்ற இவரது பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் ஆகியோர் பங்கேற்றனர்.