மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் பிரச்சார கூட்டங்கள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அதே போல நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரி சோதனையும் நடந்து வருகிறது.

kamalnath

Advertisment

தமிழகத்தில் திமுக வின் துரைமுருகன் இல்லம், கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கமான சிலரின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதனையடுத்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கட்சியை சேர்ந்த சில முக்கிய நபர்கள் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக தற்போது மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் செயலாளர் வீடு உட்பட 60 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் வருமானவரி சோதனை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்று மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் புகார் அளித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.