/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/government-in.jpg)
அரசாங்க அலுவலகங்களில் அலுவலக உபயோகத்திற்காக இன்னும் சிறிது காலத்திற்கு புதிய வாகனங்களோ, ஏ.சி -யோ வாங்கக்கூடாது என மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத். தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செலவீனங்களை குறைக்கவும், தேவையற்ற மாசினை குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலகங்களின் மற்ற தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், மாணவர், பெண்கள் விடுதிகளுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Follow Us