kamal

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது புதிய கட்சிக்கான அங்கீகாரத்தினை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக இன்று டெல்லி சென்றார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.

Advertisment

இந்நிலையில் கமல்ஹாசன், தனது கட்சியை முறைப்படி பதிவு செய்ய, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். அதன்படி, கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் இது குறித்து எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை. இதன்மூலம் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்ததை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று முறையாக பதிவு செய்யப்படுகிறது.

kamal

Advertisment

இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியை முறையாக பதிவு செய்யும் பொருட்டு இன்று காலை 11 மணி அளவில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தார்.