புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘கல்யாண்’ திட்டம்... -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

 Kalyan Scheme for Migrant Workers - Announcement by Nirmala Sitharaman

தற்போது இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புலம்பெயர்தொழிலாளர்களுக்கானதிட்டங்கள் குறித்த முன்னெடுப்புகளை அவர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அப்பொழுது பேசுகையில்,

பொருளாதார இழப்பை சரிசெய்ய மத்திய,மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்கும்.நாட்டில் அதிகம் புலம்பெயர் தொழிலாளர்கள் 116 மாவட்டங்களுக்கு திரும்பியுள்ளனர்.புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் திறனுக்கு ஏற்ப வேலைகளை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘கல்யாண்’ என்ற புதிய திட்டத்தின்கீழ்புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிய புதிய திட்டம் உருவாக்கப்படும். 50,000 கோடி மதிப்பிலான திட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களைஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக ‘கல்யாண்’ என்ற பெயரில் சனிக்கிழமை முதல் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

coronavirus Nirmala Sitharaman
இதையும் படியுங்கள்
Subscribe