Advertisment

காளி சர்ச்சை... இயக்குநர் லீனா மணிமேகலைக்கு லுக் அவுட் நோட்டீஸ்! 

Kali Controversy...Look Out Notice for Director Leena Manimekalai!

பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான லீனா மணிமேகலை 'காளி' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமான காளி வேடம் அணிந்த பெண் வாயில் சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியை பிடித்தவாறு இருந்தது. இது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் மற்றும் இந்துத்துவவாதிகள் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்கு பதிவு செய்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இயக்குநர் லீனா மணிமேகலை தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்த காளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. மத உணர்வை அவமதிக்கும் வகையில் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ட்விட்டர் நிறுவனம் இந்த பதிவை நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்து அமைப்புகள் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆவணப்பட இயக்குநர் லீனாமணிமேகலைக்கு போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

Advertisment

film police uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe