Advertisment

கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் அலுவலகம் சூறையாடல்!

kala

Advertisment

கர்நாடகாவில் காலா படம் வெளியிட அனுமதி கிடைத்துள்ள நிலையில், காலா படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசிய போது, காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.

Advertisment

ka

காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் தெரிவித்தார். இந்த நிலையில் சி நிறுவனத்தின் அலுவலகத்தை கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் சூறையாடியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

kaala rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe