Kalaignar birthday celebration on pondicerry

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.கவின் முன்னாள் தலைவருமான மறைந்த கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் தி.மு.கவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

புதுச்சேரி அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Advertisment

Kalaignar birthday celebration on pondicerry

இதேபோல் கோவிந்தசாலையில் உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால் ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட எழுதுப்பொருட்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா எம்.எல்.ஏ வழங்கினார்.