ADVERTISEMENT

கரோனா சிகிச்சையில் பயனளிக்கிறதா கபசுர குடிநீர்? - மாநிலங்களவையில் மத்திய அரசு பதில்!

11:06 AM Jul 21, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கரோனா தொற்று, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்தக் கரோனா தொற்றுக்கென தனியாக மருந்துகள் எதுவுமில்லாததால், மற்ற நோய்களுக்கான மருந்துகள் கரோனாவிற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இதற்கிடையே கரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க பல இடங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரால் கபசுரக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இதையடுத்து, கபசுரக் குடிநீர் பொதுமக்களைப் பாதுகாக்குமா என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில், கபசுரக் குடிநீர் கரோனா சிகிச்சையில் பயனுள்ளதாக இருந்ததாக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் மகேந்திரபாய் முன்ஞ்சபாரா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மகேந்திரபாய் முன்ஞ்சபாரா, "அறிகுறியற்ற, லேசான மற்றும் மிதமான கரோனா நோய்த்தொற்றுக்கு, ஆயுஷ்-64 மற்றும் கபசுரக் குடிநீர் பயனளிப்பது அறிவியல் ஆய்வுகளில் தெரியவந்ததால் அவை கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டது" என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT