நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஜோதிராதித்ய சிந்தியா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Advertisment

jyotiraditya scindia resigns his post as congress party general secretary

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் முக்கியமானவரும், ராகுலின் நெருங்கிய நண்பருமான சிந்தியா நேற்று தனதுஇந்த ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பல காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் பதவியை தொடர்ந்து ராஜினாமா செய்துவருகின்றனர். அந்த வகையில் ஜோதிராதித்ய சிந்தியாவும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.