பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, இதுவே தனது வாழ்வில் நிகழ்ந்த இரண்டாவது திருப்புமுனை எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

jyotiraditya scindia pressmeet after joining bjp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி இன்று பாஜகவில் சேர்ந்தார் ஜோதிராதித்ய சிந்தியா. பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, "மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். ஆனால் என்னால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு அந்தக் கட்சிதான் காரணம். முன்பு இருந்தது போல இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி இல்லை. என் வாழ்க்கையில் இரண்டு திருப்புமுனைகள் நடந்துள்ளது. அதில் முதலாவது என் தந்தையின் மரணம். இரண்டாவது இப்போது பாஜகவில் இணைந்தது" எனத் தெரிவித்துள்ளார்.