Advertisment

ப.சிதம்பரம் ஜாமீன் மனு... கைவிரித்த உச்சநீதிமன்ற நீதிபதி... அதிர்ச்சியில் காங்கிரஸ் தரப்பு...

கடந்த 2007- ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

Advertisment

justice ramana turns down p.chidambaram plea

இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தரப்பில் விசாரணைகளுக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என வாதிட்டனர். இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment

இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லாத நிலையில், அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். இந்த நிலையில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று காலை இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமணா, இது ஊழல் தொடர்பான விவகாரம் என்பதால் உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளார். சிதம்பரத்தின் ஜாமீனுக்காக தொடர்ந்து முயற்சித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு உச்சநீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

INX media p.chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe