Skip to main content

ப.சிதம்பரம் ஜாமீன் மனு... கைவிரித்த உச்சநீதிமன்ற நீதிபதி... அதிர்ச்சியில் காங்கிரஸ் தரப்பு...

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

கடந்த 2007- ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

 

justice ramana turns down p.chidambaram plea

 

 

இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தரப்பில் விசாரணைகளுக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என வாதிட்டனர். இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லாத நிலையில், அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். இந்த நிலையில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று காலை இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமணா, இது ஊழல் தொடர்பான விவகாரம் என்பதால் உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளார். சிதம்பரத்தின் ஜாமீனுக்காக தொடர்ந்து முயற்சித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு உச்சநீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கடைசியில் ஒரே கட்சி ஒரே தலைவர் என்பதில் போய் முடியும்" - ப. சிதம்பரம் விளாசல்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

former union minister chidambaram says one party one leader and condemn bjp 

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் கலைஞர் 100 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 'உழைப்பு தந்த உயிர்ப்பு; ஒன்றியம் கண்ட வியப்பு' என்ற தலைப்பின் கீழ் பொதுக்கூட்டம், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்.பி,  சி.பி.எம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கே. பாலபாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

 

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசுகையில், "எந்த துறையாக இருந்தாலும் முதல் வரிசையில் கலைஞர் இருப்பார். அத்தகைய சிறப்பு வாய்ந்த மாமனிதருடைய நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட உள்ளோம். இந்திய அரசியல் சாசனத்தைப் படித்தவர்கள் இந்தியாவை இந்திய யூனியன் என்று சொன்னார்கள். மத்திய அரசுக்கு மாநில அரசு குறைந்த அரசு அல்ல. அதுமட்டுமின்றி சளைத்த அரசும் அல்ல.

 

குறிப்பாக பாஜக கட்சி ஆளாத மாநிலங்களோடு அவர்கள் மோதிக் கொண்டே இருந்தால் அந்த மாநிலத்தின் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும். மாநிலத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு கடந்த 9 ஆண்டுகளாக தென் மாநிலங்கள் அதிகமாக வஞ்சிக்கப்படுகின்றன. மாநிலங்களை மோடி மதிப்பது கிடையாது. மாநில உரிமைகளையும் மதிப்பது இல்லை.  ஒரே நாடு ஒரே மொழி என பாஜகவினர் சொல்வது கடைசியில் ஒரே கட்சி ஒரே தலைவர் நரேந்திர மோடி என்பதில் போய் முடியும். இன்னும் 300 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரும். அதற்குப் பிறகும் இந்த நிலைமை நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" எனப் பேசினார். 

 

 

Next Story

2024 நாடாளுமன்றத் தேர்தல்; ப. சிதம்பரம் சொன்ன ரகசியம்!

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

2024 parliamentary elections; The secret told by B. Chidambaram!

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் பாஜகவை அகற்றி காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கத் துடிக்கிறது.

 

எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட காங்கிரஸ் கட்சி கடுமையாக முயற்சித்து வருகிறது. ஆனாலும் திரிணாமூல், ஆம் ஆத்மி, சந்திரசேகர்ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் காங்கிரஸ் உடன் இணைய தற்போது வரை விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனிடையே அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கர்நாடகத் தேர்தல் முடிந்த உடன் அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், ஜூன் 12 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் கூட்டம் பீகாரில் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தல் யுக்தி குறித்தெல்லாம் என்னால் இப்போது சொல்ல முடியாது. ஆனால் பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம். என் கருத்துப்படி, பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், 400 முதல் 450 இடங்களில் பாஜக வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தும். அதுதான் ஆசை அதுவே லட்சியம் . ஜூன் 12-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்க இருக்கிறது. மேற்கூறியதை செயல்படுத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அது நடக்கும். ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும்” எனக் கூறியுள்ளார்.