Skip to main content

எனது மகளுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது-நிர்பயா தாயார் கண்ணீர் பேட்டி

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

எனது மகளுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது என நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

"டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி தனது ஆண் நண்பருடன், பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது.

டெல்லியில் நிகழ்ந்த இந்த வன்கொடுமையைக் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது. அப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்ததால், இரு அவைகளிலும் நிர்பயா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.  

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவருடைய சகோதரர் முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய நான்கு பேர் தான் குற்றவாளிகள் என போலீஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து, ராம் சிங், முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில், அக்ஷய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Justice not just for my daughter but for women all over the country


இதற்கிடையே, பாலியல் வன்கொடுமையால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவிக்கு உடல்நிலை மோசமானதால், அவரை வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்கு அனுப்ப மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டது. அதன்படி, டிசம்பர், 29 ஆம் தேதி சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மருத்துவ மாணவி நிர்பயா சிங்கப்பூரிலேயே உயிரிழந்தார்." 

நிர்பயா உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். விசாரணை நீதிமன்றத்தில் சிறார் குற்றவாளிக்கு மட்டும் 3 ஆண்டு சிறை தண்டனையும், மற்ற 5 பேருக்கும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2013-ஆம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

மற்ற 4 பேரின் தூக்கை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில், கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். எனினும் தூக்கில் இருந்து தப்பிக்க பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தினார் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங். இதனால், ஏற்கனவே 2 முறை நாள் குறிக்கப்பட்டும் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப் போனது. இப்போது, 3-வது முறையாக மார்ச் 20 ஆம் தேதி அதிகாலை 5.30க்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என நாள் குறிக்கப்பட்டது.


நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து.சரியாக 5.20 மணிக்கே தூக்கு நிறைவேற்றப்பட உள்ள திகார் சிறைக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் குழுமினர்.  இந்நிலையில் சரியாக இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.  

 

Justice not just for my daughter but for women all over the country

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்பயாவின் தாயார், எனது நாடு நீதி பெற்றுத் தந்துள்ளது. எனது மகளுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது என கண்ணீர் மல்கதெரிவித்தார்.

தூக்கிலிடப்பட்ட நால்வரின் உடலும் டெல்லி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை ஆணையரகத்தில் துவக்கப்பட்ட ‘நிர்பயா’ உதவி மையம்.. (படங்கள்) 

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

சென்னை காவல் ஆணையரகத்தில் ‘நிர்பயா’ பெயரிலான பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் இன்று (23.07.2021) திறக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள தரை தளத்தில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கிவைத்தார். 

 

 

Next Story

மாணவி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு.... என் மகளுக்கு எப்போ நீதி கிடைக்கும்... அபர்ணாவின் பெற்றோர் கண்ணீர்

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் கருணையே இல்லாமல் செயல்பட்டிருந்ததால் விதிக்கப்பட்ட தண்டனைக்கு கருணைகாட்டவில்லை. அதனால் மார்ச் 20 ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் நிர்பயாவைப் போலவே தங்கள் குழந்தை பறிகொடுத்த புதுக்கோட்டை பள்ளி மாணவி அபர்ணாவின் பெற்றோர் எங்கள் குழந்தையை கொன்றவர்களுக்கு தண்டனையே இல்லையா என்று  கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

 nirbaya case;Aparna's parents cry for help


புதுக்கோட்டை மாவடடம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்  அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கலைக்குமார். மனைவியும் அரசுப் பள்ளி ஆசிரியை. இவர்களின் இரண்டாவது குழந்தை அபர்ணா (15) தனியார்பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார். பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில்  2011 ம் ஆண்டு மார்ச் 9 ந் தேதி காலை பள்ளிக்கு தேர்வு எழுத செல்ல தயாராகிக் கொண்டிருந்த மாணவி அபர்ணாவை வீட்டுக்குள் நுழைந்த கயவர்கள் சின்னாபின்னமாக்கி கொன்றதுடன் நகைகளையும் அள்ளிக் கொண்டு சிறுமியை தூக்கில் தொங்கவிட்டு சென்றனர். இவற்றை எல்லாம் 5 வயது அபர்ணாவின் தம்பி பார்த்துக் கொண்டிருந்தான்.

பெற்றோருடன் போலீசாரும் வந்து தடயங்களை சேகரித்தனர். சிலரிடம் விசாரணையும் செய்தனர். குற்றவாளிகளை சிறுவன் அடையாளம் காட்டினான். பெரிய தண்டனை கிடைக்கும் என்று காத்திருந்தனர். ஆனால் வழக்கின் போக்கு சரியில்லை என்பதை அறிந்த கலைக்குமார் நீதிமன்றத்தை நாடினார் அதனால் சிபி சிஐடி விசாரணை கிடைத்தது. தொடர்ந்து சிபிஐ விசாரணை என 9 ஆண்டுகள் ஓடிவிட்டது. கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் எங்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பதில் சொல்லி தங்கள் இயலாமையை காட்டினார்கள்.

 

pudukottai

 

6 முறை மறைந்த மாஜி முதல்வர் ஜெ.விடமே மனு கொடுத்தும் நீதி கிடைக்கவில்லை. 16 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்துள்ளனர். நீதி கிடைக்கவில்லை என்றபதால் அரசும் காவல்துறையும் ஒரு கோடி இழப்பீடு கேட்டு மண்டும் நதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் தான் டெல்லி மாணவி நிர்பயா கொலையாளிகளின் தூக்கு தண்டனை அபர்ணாவை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நீதி கிடைக்கும் என்று நீதிமன்றத்தையும் முதலமைச்சர் ஜெ உள்பட பலரையும்  நாடினோம் நீதி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில் டெல்லி சம்பத்தைப் பார்த்து எங்களுஙக்கு நீதி கிடைக்கலயே என்று கண்கலங்கி வருகின்றனர்.