/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gfnjghn.jpg)
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் இன்று அதிகாலை, திருச்சி தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.
காரைக்குடி அருகிலுள்ள தேவகோட்டையை சேர்ந்த முன்னாள்நீதிபதி லட்சுமணன், வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கி, பின்னர் நீதிபதியாக உயர்வு பெற்று, கேரளா உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றிலும் நீதிபதியாக பணியாற்றியவர். இந்தியாவில், பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய லட்சுமணன், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் தமிழர் ஆவார். ஓய்வுக்குப் பிறகு, தனதுகுடும்பத்துடன் இவர் வசித்து வந்தார்.
இந்நிலையில், இவரது மனைவி கரோனா தொற்றுக்கு ஆளாகிக் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கடும் வருத்தத்திலிருந்த லட்சுமணன், மனைவியின்இழப்பைத் தாங்க முடியாத காரணத்தாலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்திருப்பதாக உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். மனைவி இறப்புச் செய்தி கேட்ட பின் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாத அவர், உடல் நிலை மோசமானதால், சிகிச்சைக்காகத் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், இன்று அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பால் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)