Skip to main content

இளையராஜா விவகாரம்; ஜே.பி.நட்டா கண்டனம் 

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

J. P. Nadda

 

மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இளையராஜா எழுதிய முன்னுரை பெரும் சர்ச்சையான நிலையில், இளையராஜாவிற்கு ஆதரவாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளையராஜாவின் கருத்து ஒரு கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் பிடிக்கவில்லை என்பதால் இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவருக்கு மாறுபட்ட பார்வை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள ஜே.பி.நட்டா, அதற்காக ஏன் அவரை இழிவுபடுத்தவேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வன்முறை அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் சுஷில் குமார் ரிங்கு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சுஷில் குமார் ரிங்கு மற்றும் அம்மாநில எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் இன்று (27.03.2024) தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். இது குறித்து சுஷில் குமார் ரிங்கு கூறுகையில், “ஜலந்தரின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். ஜலந்தரை முன்னோக்கி கொண்டு செல்வோம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஜலந்தருக்கு கொண்டு செல்வோம். ஜலந்தர் மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது உண்மைதான், ஏனெனில் எனது கட்சி (ஆம் ஆத்மி) எனக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டேன்.

Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் ஷீத்தல் அங்குரல்

மேலும் பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்குரல் கூறுகையில், “இப்போது அவர்களை (ஆம் ஆத்மியை) அம்பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பஞ்சாப் மக்களிடம் ஆம் ஆத்மி பொய் கூறியுள்ளது. ஆபரேஷன் தாமரை தொடர்பான ஆதாரங்களை விரைவில் கொண்டு வருவேன்” எனத் தெரிவித்தார். ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜகவில் இணைந்தது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சுஷில் குமார் ரிங்கு மற்றும் ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

Next Story

இளையராஜா பயோ பிக் - இயக்குநர் அறிவிப்பு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
ilaiayraaja biopic update

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகவுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகியது. கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குரூப் என இரண்டு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் இளையாரஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கவுள்ளதாகவும் 2025ன் நடுவில் வெளியாகவுள்ளதாகவும் அப்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. 

ilaiayraaja biopic update

பின்பு சமீபத்தில் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இப்படத்தை இயக்குவார் என தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் படப் பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் இளையராஜா, கமல், தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இப்படத்தை ஏற்கெனவே தகவல் வெளியானது போல் அருண் மாதேஷ்வரன் தான் இப்படத்தை இயக்கவுள்ளார். இதன் மூலம் இரண்டாவது முறையாக அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். முன்னதாக கேப்டம் மில்லர் படத்தில் நடித்திருந்த நிலையில் கடந்த பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றது. பின்பு மீண்டும் தனுஷை வைத்து அவரது தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டானார். ஆனால், அந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், மற்றொரு தயாரிப்பு நிறுவனத்தில் தனுஷை வைத்து இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. முன்னதாக பாலிவுட் இயக்குநர் பால்கி இளையராஜா பயோபிக்கை இயக்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.