ADVERTISEMENT

பாஜக வேட்பாளரை எட்டி உதைத்து புதருக்குள் தள்ளிய தி.காங்கிரஸ் தொண்டர்...(வீடியோ)

05:28 PM Nov 25, 2019 | santhoshkumar

மேற்குவங்க மாநிலத்திலுள்ள கரீம்பூர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதிக்கு பாஜக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் மஜும்தா திடீரென வந்தார். அப்போது, அவரது காரை திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். உடனடியாக பாஜக வேட்பாளர் காரைவிட்டு வெளியே வந்தவுடன் தி.காங்கிரஸ் தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு, ஜெயப்பிரகாஷை தாக்கினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதில் ஒரு தொண்டர், ஜெயப்பிரகாஷை எட்டி மிதித்ததில் அவர் புதருக்குள் விழுந்துவிட்டார்.பாதுகாப்பு அதிகாரிகள் வந்து ஜெயப்பிரகாஷை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். தாக்கிய திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை பாதுகாப்பு அதிகாரிகள் துறத்தினர். ஆனால், பிடிக்கமுடியவில்லை. ஜெயப்பிரகாஷ் வேண்டுமென்றே தேர்தல் நடக்கும் இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார் என திரிணாமூல் குற்றம் சுமத்துகிறது.


இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாஜக வேட்பாளார் ஜெயப்பிரகாஷ், “நான் திரிணாமூல் குண்டர்களால் தாக்கப்பட்டேன். தேர்தலின் போது முறைகேடுகளில் திரிணாமூல் தொண்டர்கள் ஈடுபட்டதால் அதைத் தடுக்கவே நான் சென்றேன். அவர்கள் தோற்றுவிடுவோம் என பயந்து ஆளும் திரிணாமூல் தொண்டர்கள் என்னைத் தாக்கினர். இதுகுறித்து நான் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துவிட்டேன்” என்றார்.

திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை மேற்கு வங்க பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT