உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக பெண் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தை வெளியிட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisment

prasanth kanojia

தனது கணவர் உத்தரப்பிரதேச போலீஸால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவருடைய மனைவி வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த பெஞ்ச், கனோஜியா மீது வழக்கு பதிவு செய்யலாம். ஆனால், கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.

Advertisment

கனோஜியா, கடவுள் குறித்தும் மோசமான ட்வீட்டுகளை வெளியிட்டதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் சொன்னதை பெஞ்ச் ஏற்கவில்லை.