ADVERTISEMENT

ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது! 

01:31 PM Jun 15, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறையின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அக்பர் சாலையைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் ஏராளமான மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடப் பேரணியாகச் செல்ல முயன்றனர்.

அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும், மீறி பேரணியாகச் சென்றதால் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி எம்.பி., "காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சுகிறார். காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டு பயப்படமாட்டோம்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT