Advertisment

ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது! 

JotHi Mani MP Congress executives arrested

Advertisment

நேஷனல்ஹெரால்டுபத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, அகிலஇந்தியக்காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவதுநாளாகத்தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறையின் இத்தகையநடவடிக்கையைக்கண்டித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்ஒன்றுகூடி தர்ணாவில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

JotHi Mani MP Congress executives arrested

Advertisment

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அக்பர் சாலையைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர்ஜோதிமணிதலைமையில் ஏராளமான மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், அமலாக்கத்துறை அலுவலகத்தைமுற்றுகையிடப்பேரணியாகச்செல்ல முயன்றனர்.

அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும், மீறிபேரணியாகச்சென்றதால் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தஜோதிமணிஎம்.பி., "காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சுகிறார். காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டு பயப்படமாட்டோம்" எனத் தெரிவித்தார்.

Delhi MP jothimani congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe