Advertisment

பேசியே சிறப்பு விருந்தினரை தூங்க வைத்த டிரம்ப்; வைரலாகும் போட்டோ...

ghgfhgf

Advertisment

ஜோஷ்வா டிரம்ப் என பெயர் வைத்ததால் பள்ளியில் தனது நண்பர்களால் கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது பெயரில் உள்ள டிரம்ப் என்ற வார்த்தையால் நண்பர்கள் என்னை கிண்டல் செய்கின்றனர் என தெரிவிக்க, அந்த சிறுவனின் இந்த பிரச்னை சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் இது குறித்து அறிந்த அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் அந்த சிறுவனை சமாதானப்படுத்தும் முயற்சியாய் அதிபர் டிரம்ப் உரையாற்றும் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். வெறும் 13 பேர் மட்டுமே விருந்தினர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுவனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிலையில் அந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் அந்த சிறுவன் தூங்க ஆரம்பித்து விட்டான். அதிபர் டிரம்ப் பேச்சை கேட்காமல் பாதியிலேயே அந்த சிறுவன் தூங்கிய புகைப்படம் மீண்டும் தற்போது அவனை சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் ஆக்கியுள்ளது. பல அமெரிக்கர்களும் அந்த சிறுவனின் குழந்தைத்தனத்தை பார்த்து அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

America joshua trump donald trump
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe