கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஜான் தாமஸ். இவர் தன்னுடைய மகன், மருமகள் மற்றும் தன்னுடைய ஒரு வயது பேரன் ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுக்குள் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமாக இறந்துள்ளார்கள். இந்த செய்தி கேரளாவில் அதிர்ச்சியை கிளப்ப இதுதொடர்பாக காவல்துறையினர் புலன் விசாரணையில் இறங்கினர். இதில் அந்த குடும்பத்துக்கு உறவினரான ஜோலி என்ற பெண்ணை போலிசார் கைசு செய்தனர். சொத்துக்கு ஆசைப்பட்டு ஆட்டுக்கால் பாயாவில் ஸ்லோ பாய்சன் வைத்து அவர்களை கொன்றதாக அவர் தெரிவித்தார்.

Advertisment

இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர், நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறையில் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸை எடுத்து அவர் கையை கிழித்துக்கொண்டுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் சிறை காவலர்களிடம் கூறவே அவர் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.