Skip to main content

ஓரு எழுத்துதான் மிஸ்... எச்டிஎஃப்சி வங்கியை ஏமாற்றிய கன்சல்டன்ஸி

Published on 01/11/2018 | Edited on 01/11/2018

அடக்கோ கன்சல்டன்ஸி (Adeco Consultancy) எனும் வேலை வாய்ப்பு மற்றும் ஆலோசனை நிறுவனம் போலியான ஆவணங்களை உருவாக்கி தன் நிறுவனத்தில் வேலைக்காக பதிந்து வைத்திருந்த நபர்களின் சம்மதத்துடன், தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியில் பணி அமர்த்தி இருக்கிறது. அடக்கோ கன்சல்டன்ஸி எனும் பெயரிலே மற்றொரு நிறுவனமும் உள்ளது. ஆனால் அது (Adeeco Consultancy), இவர்கள் ’e’ எனும் ஓர் எழுத்தை விட்டுவிட்டு, உச்சரிப்பில் அவர்கள் பெயரை போலவே வைத்துகொண்டு ஏமாற்றியிருக்கிறார்கள். 

 

aa

 

அடக்கோ கன்சல்டன்ஸி எனும் வேலை வாய்ப்பு பெற்றுதரும் நிறுவனத்தில் வேலைக்காக பதிவு செய்திருந்த சிலரின் தற்குறிப்புகளை (Resume) தேர்ந்தெடுத்து அவர்களின் சம்மதத்துடன் போலியாக, அவர்கள் இதற்குமுன் வேலை செய்தது போலவும், அதற்காக அவர்கள் சம்பளம் வாங்கியது போன்ற இரசீதுகளும் மற்றும் அவர்களுக்கான போலி சான்றிதழ்களையும் தயார்செய்து 68 பேரை எச்டிஎஃப்சி வங்கியில் பணியமர்த்திருக்கிறார்கள்.  

 

எப்படி தெரியவந்தது ?
 

இந்த வருடம் பிப்ரவரி மாதம் வங்கியில் பணிபுரியும் துணை மேலாளர் ஒருவரை குறுக்கு சோதனை செய்துள்ளனர், அப்போது அந்த அதிகாரி முறையான வழிமுறைகளை பின்பற்றி பணியில் சேரவில்லை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த அதிகாரியிடம் விசாரனை செய்தபோது அவர், அடக்கோ நிறுவனம் மூலமாக தான் பணியில் சேர்ந்ததாகவும், வங்கித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு அந்நிறுவனம் உதவியதாகவும், அதற்காக 60,000 ரூபாய் கட்டியதாகவும் ஒப்புக்கொண்டார்.

 

அதிர்ச்சித் தகவல் !
 

இந்த விஷயத்தை அறிந்ததும், அதே கன்சல்டன்ஸியில் இருந்து இன்னும் யாரெல்லாம் வந்திருக்கிறாரகள் என்று சோதனை செய்துள்ளனர். அதில் 68 பேர் அந்த கன்சல்டன்ஸியில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது, அதில் 51 பேர் எச்டிஎஃப்சி வங்கியிலே இன்னமும் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதைவிட மற்றோரு பேரதிர்ச்சி என்னவென்றால், வங்கி பணியில் சேருமுன் ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் அதற்கு எச்டிஎஃப்சி ஊழியர் ஒருவரே உடந்தையாக இருந்திருக்கிறார்.

 

வேலை தேடுவோரிடம் விளையாடும் கன்சல்டன்ஸி
 

முதலில் இந்த நிறுவனம் எச்டிஎஃப்சி வங்கியின் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக வகுப்புகள் எடுப்பதாகக் கூறி ஆட்களை சேர்க்கின்றன. அதற்கு அந்நிறுவனம் 25,000 முதல் 1,50,000 ரூபாய் வரை கட்டணம் வசுல் செய்கிறது.
 

பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு சிறிது காலங்கள் கழித்து பயிற்சி பெறுபவர்களிடம், கமிஷன் தொகையாய் குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் போலியான ஆவணங்களை தயார்படுத்தி வங்கிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களுக்கு வேலையும் வாங்கி தந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது அப்படி ஏமாற்றி பணியில் சேர்ந்தவர்கள் அவதிப்படுகிறார்கள். இன்னும் சில கன்சல்டன்ஸிகள் பணம் பெற்றுகொண்டு வேலை வாங்கிதராமல் ஏமாற்றுகிறது.

 

விவரம் அறிந்த எச்டிஎஃப்சி வங்கி, போலீஸில் புகார் அளித்துள்ளது. அதனை தொடர்ந்து, போலீஸ் அந்த கன்சல்டன்ஸியின் மீது ஏமாற்றுதல், மோசடி, ஏமாற்றுவதற்காக மோசடி செய்தது, போலி ஆவணங்களை பயன்படுத்தியது மற்றும் சதி குற்றம் ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது.

 

படித்துவிட்டு பணிகாக வெவ்வேறு வலைதளத்திலும், கன்சல்டன்ஸிகளிலும் பதிந்துவிட்டு காத்திருக்கும் இளைய சமுதாயம், ஒரு இடத்தில் இருந்து வேலை கிடைக்கிறது என்பதால் எது வேண்டுமெனாலும் செய்யலாம் என்ற நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி இதுபோன்ற நிறுவனங்களும் அவர்களை அடிபணிய வைக்கிறது. இப்போது ஏமாற்றி வேலை வாங்கிவிடலாம். ஆனால் நிச்சயம் ஏதாவது ஓரிடத்தில் சிக்கி, அதன் பின் அவர்கள் வாழ்வில் பணிக்கே செல்ல முடியாத அளவிற்கு எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது. ஏமாற்றுபர்கள் நிறுத்தமாட்டார்கள் நாம்தான் அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இணையதள சேவையில் குளறுபடி

Published on 07/12/2019 | Edited on 07/12/2019


ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை கடந்த 5 நாட்களாக முடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். கடந்த 2 ஆம் தேதி முதல் நெட் பேங்கிங் சேவை செயல்படாததால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கும் உள்ளாகி இருந்தனர். 



பின்னர் கடந்த 4 ஆம் தேதி சேவை சரியான போது பரிவர்த்தனைகளை சரிவர செய்ய முடியவில்லை என மீண்டும் புகார் அளித்து வருகின்றனர். சமூக வலைத்தளமான டிவிட்டரில்  இது குறித்து பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து ஹெச்.டி.எஃப்.சி வங்கி தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் ஹெச்.டி.எஃப்.சி-க்கு வாடிக்கையாளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

Next Story

வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் ஆஃபர் வழங்கிய "HDFC" வங்கி!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் முதன்மையான வங்கியாக திகழ்ந்து வரும் ஹெச்டிஎப்சி வங்கி (HDFC BANK) தனது 25-வது ஆண்டை நிறைவடைவதை அடுத்து தனது வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது. அதன் படி (Book My Show, Zomato, Inox Movies, Bigbasket) உள்ளிட்ட இந்த நான்கு வகைகளைப் பயன்படுத்தி கொண்டு ஹெச்டிஎப்சி வங்கி வழங்கும் 25% தள்ளுபடியை பெறலாம். இந்த சலுகைகளை ஹெச்டிஎப்சியின் (டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் வேலிடிட்டி மார்ச் 31 ,2020) கார்டைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் Inox Movies tickets, Zomato foods, Bigbasket shopping உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ளலாம்.  மேலும் இதனைப் பெறுவதற்கு ஒரு சில விதிமுறைகளை வெளியிட்டது ஹெச்டிஎப்சி வங்கி.

 

HDFC

 

அதனைத் தொடர்ந்து வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஹெச்டிஎப்சி வங்கியில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் "Zomato" வில் குறைந்தப்பட்சம் ரூபாய் 500 மதிப்பில் புக் செய்யப்படும் உணவுகளுக்கு 25% தள்ளுபடியையும் , Book My Show- வில் டிக்கெட் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூபாய் 50 வரை தள்ளுபடியும் , Bigbasket- யில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் குறைந்த பட்சமாக ரூபாய் 1500-க்கு பொருட்களை வாங்கினால் அவர்களுக்கு ஹெச்டிஎப்சியின் வழங்கும் தள்ளுபடி ரூபாய் 250 ஆகும். அதே போல் "INOX MOVIES" டிக்கெட்கள் குறைந்தது இரண்டு பெற்றுக்கொண்டால் தான் 25% தள்ளுபடியை பெற முடியும்.

 

HDFC BANK

 

ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் மாதம் இருமுறை பரிவர்த்தனையை வங்கியில் மேற்கொள்பவராக இருக்க வேண்டும். அதே போல் படத்திற்கான டிக்கெட் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை மட்டும் இந்த சலுகைகளுடன் பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் எந்த ஒரு தனியார் வங்கியும் இத்தகைய சலுகைகளை வழங்காத நிலையில் ஹெச்டிஎப்சி  வங்கி வழங்கியதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. அனைத்து விதமான தனது வங்கி வாடிக்கையாளர்களும் தள்ளுபடியை பெறும் வகையில் ஹெச்டிஎப்சி வங்கி  அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.