ரயில்வே துறையில் வேலை வழங்கக்கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டதால், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வேலைக்குச் செல்லமுடியாமல் தவித்தனர்.

Advertisment

ரயில்வே துறையில் பயிற்சியாளர்களாக (அப்பரண்டீஸ்) இருக்கும் தங்களுக்கு, துறைசார்ந்த நிரந்தர வேலை வழங்கக்கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மும்பை மாதுங்கா முதல் தாதர் வரையிலான ரயில் வழித்தடத்தில் சென்று அமர்ந்தனர். தொடக்கத்தில் சில நூறு இளைஞர்களே இருந்தாலும், சேரம் செல்லச்செல்ல ரயில்மறியலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக மாறியது.

மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவித தீர்வும் எட்டாததால், ரயில்வே போலிஸார் தடியடியில் ஈடுபட்டனர். அதேசமயம், மாணவர்களும் பதிலுக்கு கற்களை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக்கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisment

மும்பையில் போக்குவரத்துக்காக பெரும்பாலானோர் பயன்படுத்தும் ரயில் போக்குவரத்து மறியல் காரணமாக நிறுத்தப்பட்டதால், நிறுவனங்கள், வியாபாரம், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ஆங்காங்கே உள்ள ரயில்நிலையங்களில் தவித்தனர்.