புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்.
இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், காவலர் தேர்வில் வயது வரம்பை தளர்த்த வேண்டும்,புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கருப்புக்கொடியேந்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.