ஜியோ அடுத்த கட்டமாக புகழ்பெற்ற சாவன் இசை நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் அடுத்த ஒன்பில்லியன் நிறுவனமாக இந்த கூட்டணி இருக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jio-saavn.jpg)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இசை ஆப்ஸ் உலகில் பிரபலமாக இருக்கும் சாவன் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளது. இதன்மூலம் இது இசை உலகில் சாதனை படைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். சாவன்நிறுவனத்தை உருவாக்கிய வினோத் பாட், ரிஷி மல்கோத்ரா, பர்மதீப் சிங் ஆகியோர் எப்போதும் போன்று தங்கள் தலைமை பணியை செய்வர், வளர்ச்சிக்கு உதவுவர் என்றும் தெரிவித்துள்ளனர். ஜியோ நிறுவனத்தை தவிர்த்து, ரிலையன்ஸ் நிறுவனமும் மேம்பாட்டிற்காக முதலீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)