டி.ஆர்.ஏ எனும் ஆய்வு அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், தென் கொரியா நிறுவனமான சாம்சங் இந்தியாவின் கவர்ச்சிகரமான பிராண்டாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருக்கும் தொலைத்தொடர்பு துறை சேவைகளில் முதல் இருபது இடங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த ஆய்வில் கவர்ச்சிகரமான பிராண்டாக முதலிடத்தில் சாம்சாங்க, இரண்டாவது இடத்தில் டாடா மோடார்ஸ், மூன்றாவது இடத்தில் ஆப்பிள் ஐ-ஃபோன் என இருக்கின்றது. இந்த ஆய்வு, மொத்தம் 16 நகரங்களில் இருக்கும் 2,474 வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு. அதன் அடிப்படையில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது.