Skip to main content

ஜியோ - கூகுள் கூட்டணியில் குறைந்த விலை மொபைல்கள் அறிமுகம்!

 

fg

 

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் கூட்டணியில் உருவான 2 புதிய மொபைல் ஃபோன்கள் வருகிற 10ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் பேசிக், ஜியோ ஃபோன் அட்வான்ஸ்டு என்ற பெயர்களில் இந்த தொலைபேசிகள் சந்தைக்கு வர இருக்கிறது. இதற்கான புக்கிங் ஏற்பாடுகளும் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜியோ நெக்ஸ்ட் ரூபாய் 5,000 என்ற விலையிலும், ஜியோ அட்வான்ஸ்டு 7,000 ரூபாய் என்ற அளவிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. டெலிகாம் துறையில் சத்தமில்லாமல் அதிரடிகளைப் படைத்துவரும் ஜியோ நிறுவனம், தற்போது குறைந்த விலை மொபைல் விற்பனைகளிலும் கால் பதிக்க இருக்கிறது. பெரிய அளவிலான வியாபாரத்தை இதில் தாங்கள் எதிர்பார்ப்பதாக ஜியோ அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.