Advertisment

வோடபோன் இழந்தது 68 மில்லியன்... ஜியோ பெற்றது 44 மில்லியன்...

ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. போட்டி நிறுவங்கள் ஜியோவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

Advertisment

jio gains 44 million customers and vodafone lost its 68 million customers

ஏற்கனவே ஏர்செல் நிறுவனம் மூடப்பட்ட நிலையில், ஐடியாவும் வோடபோனும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் போட்டியாளர்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் சி.எல்.எஸ்.ஏ அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி இந்தியா முழுவதும் 3ஜி/4ஜி இணைய சேவையை பயன்படுத்துபவர்களில் 52 சதவீதம் பேர் ஜியோ நெட்ஒர்க் சிம்கார்டுகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. 23 சதவீதம் பேர் ஏர்டெல் உபயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் கடந்த 6 மாதங்களில் வோடபோன்-ஐடியா நிறுவனத்திலிருந்து 68 மில்லியன் (6.8 கோடி) பயனாளர்கள் விலகியுள்ளதாக தெரிகிறது. அதே நேரம் புதிதாக 44 மில்லியன் (4.4 கோடி) பேர்ஜியோ நெட்வொர்க்கில் இணைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

airtel vodafone india jio
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe