Skip to main content

30 நாட்களுக்கு ஜியோ ஃபைபர் சேவை இலவசம்... ஜியோ அதிரடி அறிவிப்பு!!!

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

jio

 

புது பயனாளர்களின் எண்ணிகையை அதிகரிக்க ஜியோ ஃபைபர் சேவையை 30 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தும் வண்ணம் புதிய அறிவிப்பு ஒன்றை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஏற்கனவே உள்ள பயனாளர்களுக்குப் பொருந்தாது.

 

இந்திய அளவில் அதிகப்படியான மக்கள் ஜியோ இணைய சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஜியோ நிறுவன வருகைக்குப் பின்னரே இந்தியாவில் இணையதளப் பயன்பாடும் அதிகமானது. அதனைத் தொடர்ந்து ஜியோ நிறுவனமும் தங்கள் பயனாளர்களின் எண்ணிகையை அதிகரிக்கவும், ஏற்கனவே உள்ள பயனாளர்களைத் தக்க வைக்கவும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜியோவின் மற்றொரு சேவையான ஜியோ ஃபைபரில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, ரூ.399, ரூ.699, ரூ.999, ரூ.1,499 என்ற வகையில் நான்கு ப்ளான்களை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ப்ளான்களிலும் அந்தப் பணத்தொகைக்கு ஏற்ப இணையத்தள வேகம் மாறுபடும். மேலும் கூடுதல் சலுகையாக இந்தியாவின் முன்னணி ஒ.டி.டி தளங்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக வழங்கப்படும். ரூ.399, ரூ.699, வகை ப்ளான்களை பயன்படுத்த நினைப்பவர்களுக்கு ஒ.டி.டி சேவையானது வழங்கப்படவில்லை. 30 நாட்களுக்குப் பிறகு பிடிக்கவில்லை எனும் பட்சத்தில் எந்தக் கேள்வியும் கேட்காமல் திரும்பி எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது

 

இது குறித்து ஆகாஷ் அம்பானி கூறும் போது, "ஜியோ ஃபைபர் சேவை இந்தியாவில் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பல லட்சக்கணக்கான வீடுகளை இணைத்துள்ளோம். இந்தியா மற்றும் இந்தியர்கள் குறித்தான எங்கள் திட்டம் பெரியது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் இதை எடுத்துச் சென்று, அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும்படி செய்வதே எங்கள் நோக்கம்" என்றார்.

 

இந்தத் திட்டமானது செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 -க்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்கனவே ஜியோ ஃபைபர் இணைப்பை பெற்றவர்களுக்கும் இந்தச் சேவையானது கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் ஃபைபர் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

     

சார்ந்த செய்திகள்

Next Story

பழைய பயனாளர்களுக்கும் ஜியோ ஃபைபரின் 30 நாள் இலவச சேவை பொருந்தும்...

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

jio

 

இந்தியாவில் முன்னணி நெட்வொர்க்கிங் நிறுவனமாக ஜியோ இருந்து வருகிறது. நிறுவனம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே தன்னுடைய அதிரடி அறிவிப்பினால் அதிகப்படியான வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுத்தது. அதன்படி சில தினங்களுக்கு முன்னால் ஜியோ ஃபைபரில் ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. புதிதாக ஜியோ ஃபைபர் சேவையைப் பெறுபவர்கள் 30 நாட்கள் அதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அதன் பின்பு சேவையைத் தொடர விரும்பாத பட்சத்தில் எந்தக் கேள்வியும் இன்றி ஜியோ நிறுவனம் சேவையை ரத்து செய்துகொள்ளும் என்றும் அறிவித்தது. இந்தத் திட்டமானது செப்டம்பர் 1 -ஆம் தேதி (நேற்றில்) முதல் அமலுக்கு வந்தது. இது பழைய ஜியோ ஃபைபர் பயனாளர்களுக்கு பொருந்தாது என்றும் முன்னர் ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது.

 

இந்தநிலையில் ஜியோ நிறுவனம் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்துள்ளது. அதன்படி இந்தச் சேவையை பழைய பயனாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தச் செய்தியை ஜியோ நிறுவனம் தன்னுடைய ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வருகிறது.

 

 

Next Story

ஆஃபர்களால் வாடிக்கையாளர்களை திணறடிக்கும் அம்பானி... 'ஜியோ ஃபைபர்' சந்தா கட்டணங்கள் வெளியீடு...

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

மொபைல் நெட்வொர்க் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஜியோ தற்போது 'ஜியோ ஃபைபர்'  திட்டத்தின் மூலம் பிராட்பேண்ட் துறையிலும் களம் காண்கிறது.

 

jio fiber plans

 

 

அதிரடி ஆஃபர்கள், குறைந்த கட்டணம் என டெலிகாம் துறையில் தனது போட்டியாளர்களை ஓரம்கட்டி முதலிடத்தை பிடித்துள்ளது ஜியோ நிறுவனம். இதே போன்ற அணுகுமுறையை கடைபிடித்து ஜியோ ஃபைபர் திட்டத்தையும் வெற்றி திட்டமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

இந்தியா முழுவதும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஜியா ஃபைபரின் சந்தா திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி  Jio.com தளம் மற்றும் MyJio செயலி மூலமாக முன்பதிவு செய்து இந்த ஜியா ஃபைபர் திட்டத்தில் இணையலாம். இதற்காக முதலில் 2500 ரூபாய் பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதில் 1,500 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட், இதைத் திரும்பப்பெற்றுக்கொள்ள முடியும். 1,000 ரூபாய் இன்ஸ்டால் செய்யும் சேவைக்கான கட்டணம்.

இந்த தொகை கட்டப்பட்ட பின் அறிமுக சலுகையாக 6,400 ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் 4K செட்-அப் பாக்ஸும், 5,000 மதிப்புள்ள ஜியோ ஹோம் கேட்வே சாதனமும் இலவசமாகக் கிடைக்கும். இதன்மூலம் இந்தியா முழுமைக்கும் அளவில்லா போன் கால்கள், 100 Mbps முதல் 1Gbps வேகம் வரையிலான அதிவேக இணைய சேவை உள்ளிட்ட பல வசதிகளை பெற முடியும்.

இந்த சேவைகள் Bronze, Silver, Gold, Diamond, Platinum, Titanium என ஆறு விலைகளில் வருகின்றன. குறைந்தபட்சமாக Bronze பிளானில் மாதம் ரூ.699 செலுத்தினால் 100 Mbps வேகத்தில் 100 GB ஒரு மாதத்திற்குக் கொடுக்கப்படுகிறது. அறிமுக சலுகையாக இத்துடன் முதல் 6 மாதங்களுக்குக் கூடுதல் 50 GB டேட்டா கிடைக்கும். இது முடிந்தவுடன் 1 Mbps இணையச் சேவை தொடரும். அதேபோல அதிகபட்சமாக Titanium பிளானில் மாதம் ரூ.8,499 செலுத்தினால் 1 Gbps வேகத்தில் மாதத்திற்கு 5000 GB டேட்டா கிடைக்கும். மேலும் ஜியோ சினிமா, சாவன் உள்ளிட்ட செயலிகளை இலவசமாக பயன்படுத்த முடியும். இவை அல்லாமல் கூடுதல் சந்தா செலுத்துவதன் மூலம் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வசதியும் இதில் உள்ளது.

மேலும், ஜியோ கோல்ட் மற்றும் சில்வர் வாடிக்கையாளர்களுக்கு 2 புளூடூத் ஸ்பீக்கர்கள் கிடைக்கும். இதேபோல் டயமண்ட், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் ஆண்டு திட்ட சந்தாதாரர்களுக்கு இலவச எச்டி டிவி கிடைக்கும் (ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறு திரை அளவு). தங்கத் திட்ட சந்தாதாரர்களுக்கு இலவசமாக 24 அங்குல எச்டி டிவியும் கிடைக்கும், ஆனால் இரண்டு ஆண்டு திட்டத்தை தேர்வு செய்தால் மட்டுமே இந்த டி.வி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.