நஷ்டத்தில் இயங்கி வருவதாக சொல்லப்படுகிற தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை செல்போன் சேவையின் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்திருந்தன. தற்போது இந்த வரிசையில் ஜியோ நிறுவனமும் இணைந்திருக்கிறது.

Advertisment

reliance

இந்நிலையில் ஜியோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மற்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களைப் போல தங்கள் நிறுவனமும் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடுத்த சில வாரங்களில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் அதில், “ இந்த கட்டண உயர்வு குறித்து தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயுடன் ஜியோ ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த கட்டண உயர்வு இணையதள பயன்பாட்டையும், டிஜிட்டல்மய வளர்ச்சியையும் பாதிக்காத வகையிலும், முதலீடுகளை நிலைநிறுத்துகிற வகையிலும் அமையும் எனவும்” குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

Rajapaksha