இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பால் அதன் வாடிக்கையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

Advertisment

jio charges for other network outgoing calls

இந்தியா முழுவதும் 3ஜி/4ஜி இணைய சேவையை பயன்படுத்துபவர்களில் 52 சதவீதம் பேர் ஜியோ நெட்ஒர்க் சிம்கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இலவச கால்கள், இணைய சேவை என அனைத்தையும் குறைந்த விலை பிளான்களில் வழங்கிவந்த ஜியோ, இனி அவுட் கோயிங் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. டிராயின் புது விதிப்படி, ஜியோ எண்ணிலிருந்து வேறு நெட்வோர்க்கிற்கு கால் செய்தால் இனி நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக இனி 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தனியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி ரீசார்ஜ் செய்யும் தொகைக்கு ஏற்ப கூடுதல் டேட்டா வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள்இலவச கால்களை கொடுத்துவரும் நிலையில், ஜியோ கட்டணம் வசூலிக்கப்போவதாக கூறியுள்ளது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.