Published on 10/08/2018 | Edited on 10/08/2018

நேரு மற்றும் ஜின்னா பற்றிய சர்ச்சை கருத்திற்கு தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளார்.
அண்மையில் கோவாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தலாய்லாமா கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றி பேசினார். அப்போது மாணவரின் ஒரு கேள்விக்கு பதிலளித்த தலாய்லாமா சுதந்திரத்திற்கு பின் முகமது அலி ஜின்னாதான் இந்தியாவின் முதல் பிரதமராக வேண்டும் என காந்தி விரும்பினார் ஆனால் நேரு அதற்கு ஒத்துழைக்கவில்லை அதற்கு நேருவிடம் இருந்த சிறிய சுயநலமே காரணம் என்றும் கூறியிருந்தார்.
இந்த பதில் பலர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. தான் கூறியதில் தவறு இருக்குமானால் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.